சிறிலங்கா விவகாரம் குறித்து எந்த விவாதமும் இல்லாத‌ கொமன்வெல்த் அமைச்சரவைக் கூட்டம்

Written by vinni   // September 28, 2013   //

commonகொமன்வெல்த் அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலு அந்தக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டம், பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சர் திப்பு முனி தலைமையில் நேற்று நியுயோர்க்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும், நேற்றைய கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை.

பிஜி விவகாரம் குறித்தே முக்கியமாக இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாலைதீவு குறித்து ஒரு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அவுஸ்ரேலியா, கனடா, ஜமைக்கா, மாலைதீவு, சியரலியோன், தன்சானியா, ரினிட்டாட் அன் டுபாகோ, வனாட்டு ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்குபற்றினர்.


Similar posts

Comments are closed.