வடக்கில் வேட்பாளர்களில் பலரை சில வெளிநாடுகளே தெரிவு செய்தன‌ – பசில் ராஜபக்ச

Written by vinni   // September 28, 2013   //

pasilவடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பலரை சில வெளிநாடுகளே தெரிவு செய்திருந்தன என  இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களைத் தெரிவு செய்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சில நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், தங்களுக்கு விருப்பமான சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் வேட்பாளர்களாகக் களமிறக்கும்படி கேட்டுக் கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில வேட்பாளர்கள் வடபுலத்தில் போட்டியிட நிறுத்தப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.