நரேந்திரமோடி பேரணிக்கு உத்தரபிரதேசத்தில் அனுமதி மறுப்பு

Written by vinni   // September 28, 2013   //

uthrapiratheshஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அடுத்த மாதம் (அக்டோபர்) 20-ந்தேதி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி மற்றும் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்ளும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பேரணியை தொடர்ந்து கான்பூர் அருகே நிரலாநகர் பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இது தொடர்பாக கான்பூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் சுரேந்திர மைதானிக்கு ரெயில்வே முதன்மை என்ஜினீயர் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த பேரணிக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரபிரதேச பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கூறினார். மேலும், நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் முயன்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.


Similar posts

Comments are closed.