நியூயோர்க்கில் பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கை குழு கூட்டத்தில் இலங்கை பங்கேற்கவில்லை

Written by vinni   // September 28, 2013   //

IMG_5152நியூயோர்க்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கை குழு கூட்டத்தில் இலங்கை பங்கேற்கவில்லை.

பங்களாதேஸின் வெளியுறவு அமைச்சர் திபு மொனி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று ஏற்கனவே சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் பிஜி மற்றும் மாலைதீவைப் பற்றியே பிரதானமாக ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் கனடா, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


Similar posts

Comments are closed.