அவுஸ்திரேலியாவிற்கு அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 20 பேர் பலி

Written by vinni   // September 28, 2013   //

boatcrashஅவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் படகு ஒன்று ஜாவா தீவுகளுக்கு தெற்கே கடலில் மூழ்கியதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் குறைந்தது 20 பேர் வரை பலியாகியுள்ளனர். 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலரைக் காணவில்லை.

இவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அப்பொட் அவர்கள், அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வருவது குறித்துப் பேசுவதற்காக ஜாவாவுக்கு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அண்மைய வருடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்காக இந்தோனேசியாவின் ஊடாக மரப் படகுகளில் பயணம் செய்துள்ளனர்.

இவர்களில் இலங்கையர்களும் அடங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Similar posts

Comments are closed.