மோடி கான்வாய் பாதையில் புகுந்த மர்ம பெண்!

Written by vinni   // September 27, 2013   //

jaffna_girlதிருச்சியில் நரேந்திர மோடி கான்வாய் பாதையில் டூவீலரில் புகுந்த மர்ம பெண்ணால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் நேற்று நடந்த பா.ஜ., இளந்தாமரை மாநாடு முடிந்தவுடன், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விமான நிலையம் செல்ல தயாராகினர்.

அவர்கள் பயணம் செய்யும் வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இரவு 7:00 மணிக்கு பொன்மலைப்பட்டி ஜெயில் கார்னர் பகுதியில் இரண்டு வழிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி பொலிசார் வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.

அப்போது டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் இருந்து விமான நிலையம் நோக்கி எதிர் திசையில் டூவீலர் ஒன்று வேகமாக வந்தது.

ஜெயில் கார்னர் பகுதியில் பொலிசார் டூவீலரை நிறுத்தினர். டூவீலரில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தனர். பெண் ஒரு பெரிய அளவில் பை ஒன்றை பின்புறம் மாட்டியிருந்தார்.

அங்கு மப்டியில் நின்ற பொலிசார் இருவரிடமும் தனித்தனியே விசாரித்தனர். விசாரணையில், இருவரும் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அவர்கள் வைத்திருந்த மொபைல்போன் உள்ளிட்டவற்றை வாங்கி சோதனை செய்தனர். விசாரணையில், அந்த பெண் வட ஆற்காடு ஷானார்பட்டியைச் சேர்ந்த பாபு என்பவரது மகள் ரஷீதா(28) என்பது தெரியவந்தது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்லும் உறவினர் ஒருவரது வீட்டில் இரவு தங்கி அவரிடம் ஜவுளிகளை கொடுத்து அனுப்புவதற்காக வந்ததாக தெரிவித்தார்.

மேலும் டூவீலரில் வந்த வாலிபரிடம் டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து லிப்ட் கேட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

எனினும் நரேந்திர மோடியின் கான்வாய் அந்த பகுதியை கடந்து சென்ற பிறகும் தொடர்ந்து பொலிசார் நேற்றிரவு நீண்ட நேரம் வரை அவர்களை விசாரித்துள்ளனர்.

அந்த வாலிபரிடம் விசாரித்ததில், லிப்ட் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். ஆனால், டூவீலர் யாருடையது, எதற்காக லிப்ட் கொடுத்தார் என்ற கேள்விகளுக்கு அவர் மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.

இதனால் இவரிடமும் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Similar posts

Comments are closed.