அம்மா போஸ்டரின் அர்த்தம் என்ன?

Written by vinni   // September 27, 2013   //

karuna_nithiபார்வையற்ற பட்டதாரிகளை அரசு தவிக்க விட்டு அரசு மனம் இறங்காமல் இருந்தால், சென்னையைச் சுற்றி ஒட்டப்பட்டிருக்கும் அம்மா போஸ்டர்களுக்கு அர்த்தமே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

பார்வையற்ற பட்டதாரிகளின் தொடர் போராட்டம் குறித்து கேட்டதற்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வையற்ற பட்டதாரிகளை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இவ்வளவிற்கும் பிறகு இங்கே உள்ள அ.தி.மு.க. அரசு மனம் இறங்காமல் இருந்தால் சென்னையைச் சுற்றி ஒட்டப்பட்டிருக்கும் அம்மா போஸ்டர்களுக்கு அர்த்தமே இல்லை.

மேலும் மீனவர்கள் விடுதலைக்காக அ.தி.மு.க போராட்டம் அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்காக தி.மு.க போராட்டம் நடத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.