ட்ரையல் ரூமில் கமெரா! பெண்களே உஷார்

Written by vinni   // September 27, 2013   //

Camaraசென்னையில் டெய்லர் கடை நடத்தும் ஒரு நபர் பெண்களின் உடை மாற்றும் அறையில் ரகசிய கமெராவை வைத்து ஆபாச படங்களை எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராய்பூரில் டெய்லராக பணிபுரிபவர் அமித். இவர் பெண்கள் உடையை தைப்பதால் அவர்கள் ஆடை அளவு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள இவர் அவரது கடையில் ஒரு ட்ரையல் அறையை வைத்துள்ளார்.

பெரும்பாலான பெண்கள் ஆடைகளை தைக்க சரியான அளவு துணியை கொடுப்பதால் யாரும் அமித்தின் கடையில் உள்ள ட்ரையல் அறையை பயன்படுத்தமாட்டார்கள்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் ஆடையை வேண்டுமென்றே சிறியதாக தைத்த அமித், அதனை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

அமித் தைத்த துணியை பார்த்த அப்பெண் தான் சரியான அளவு துணி கொடுத்தப்போதிலும் ஏன் ஆடையை சிறியதாக தைத்ததாக கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமித் ஆடை சரியாக இருக்கும், வேண்டுமென்றால் ட்ரையல் அறையில் சரிபார்த்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

இதனால் அப்பெண் ட்ரையல் அறைக்கு சென்றார். அங்கு ஏற்கனவே பல துணிகள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அவர் அதனை பிரித்து பார்த்தப்போது அதில் கமெரா மொபைலில் இவரும் வேறு சில பெண்களும் ஆடை மாற்றிய காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அந்த மொபைலை எடுத்துக்கொண்டு பொலிசிடம் சென்ற அப்பெண் டெய்லர் மீது புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் உடனடியாக அமித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.