லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி மீது ‘செக்ஸ்’ புகார்கள்

Written by vinni   // September 27, 2013   //

kadabiலிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபி (72). இவருக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு லிபியாவில் மக்கள் புரட்சி வெடித்தது. இதை தொடர்ந்து அவர் எடுத்த ராணுவ நடவடிக்கை தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து பானிவாலிட் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை புரட்சி படையினர் பிடித்து அடித்து கொன்றனர்.

கடாபியின் வலதுகரமாக அவரது பாதுகாப்பு இயக்குனர் மன்சூர் டாவ் இருந்து வந்தார். தொடக்கம் முதல் அவரது வாழ்க்கை முடியும் வரை உடன் இருந்தார்.

கடாபி மீது ‘செக்ஸ்’ புகார்கள் உள்ளன. இவர் தனது மாளிகையின் பாதாள அறையில் இளம் பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டதாக கூறப்பட்டது.

இது குறித்து மன்சூரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மழுப்பலாக அவர் பதில் அளித்தார். ‘செக்ஸ்’ என்பது ஒருவரது வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயம்.

கடாபியை பொறுத்தவரை அவர் ஒரு ‘செக்ஸ்’ பிரியர் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா என்பது எனக்கு தெரியாது. பங்களாவின் பாதாள அறையில் உள்ள ‘செக்ஸ்’ மாளிகைக்குள் நான் சென்றதில்லை.

ராணுவ அதிகாரிகளில் நான் உயர்பதவியில் இருந்தேன். அத்துடன் அவருக்கு கமாண்டராகவும் பணிபுரிந்தேன். எனவே, அவரது கட்டளையை மட்டும் நிறைவேற்றுவேன் என்றார்.


Similar posts

Comments are closed.