சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு

Written by vinni   // September 27, 2013   //

Anna-hazareஊழலை எதிர்த்து போராடியதற்காக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு ஒரு லட்சம் டாலர் (ரூ.62 லட்சம்)  வழங்கப்பட்டது. கனடா நாட்டின் வான்கூவர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச நேர்மைக்கான இந்த அல்லார்டு பரிசு வழங்கப்பட்டது. ஊழலை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் மனித உரிமைக்காக போராடுபவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அன்னா ஹசாரே, ‘எனக்கு பணம், சொத்து மீது ஆசை இல்லை. இருப்பினும், இந்த பரிசை பெற்றதன் மூலம், ஊழலுக்கு எதிரான எனது வாழ்நாள் போராட்டம் மேலும் வலிமை அடையும். இந்த சர்வதேச அங்கீகாரம் மூலம் மாற்றத்துக்கான இயக்கம் வலுப்பெறும்’ என்று கூறினார்.


Similar posts

Comments are closed.