ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்: பிசிசிஐ-க்கு லலித் மோடி எச்சரிக்கை

Written by vinni   // September 26, 2013   //

lalit-modiவாழ்நாள் தடை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள லலித் மோடி, விரைவில் பல்வேறு ரகசியங்களை வெளியிடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக லலித் மோடி கடந்த 2010ம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்க நேற்று பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் லலித் மோடிக்கு, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள லலித் மோடி, தாம் சில தவறுகள் செய்திருந்தாலும் பிசிசிஐ-க்கு ஐபிஎல் மூலமாக சுமார் 800 பில்லியன் டொலர் வரை பெரும் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளேன்.

விரைவில் பிசிசிஐ-யில் உள்ளவர்கள் குறித்து பல்வேறு ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்று எச்சரித்துள்ளவர், இனிமேல் தன்னுடைய கவனம் முழுவதும் பிசிசிஐ-யை கண்காணிப்பதிலேயே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.