இணையத்தில் அரசுக்கு எதிராக வதந்தி பரப்பிய மாணவனால் பரபரப்பு

Written by vinni   // September 26, 2013   //

computer_001இணையத்தின் மூலமாக வதந்தி பரப்பிய பள்ளி மாணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் ஹான்சு மாகாணத்தில் உள்ள ஜான்ஜிசுவான் என்ற இடத்தில் அரசுக்கு எதிராக வதந்தி பரப்பியதாக 16 வயது பள்ளி மாணவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து பொலிசார் விசாரணை நடத்தினர், சீனாவில் அரசுக்கு எதிராக வதந்தி பரப்பினால் கடுமையான தண்டனைகள் உண்டு.

பள்ளி மாணவனின் இந்த நடவடிக்கையால் வதந்தி பரவி சமூகத்தில் சீர் குலைவு ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு முறையீடுகளுக்கு பிறகு சீனாவின் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, அரசுக்கு எதிராக இணையத்தில் வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றில் கீழ் நீதிமன்றங்கள் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

இணையத்தில் பதிவு செய்த வதந்தியை 5000க்கும் அதிகமானோர் பார்த்திருந்தாலோ, 500க்கு அதிகமான முறை மறுபதிவு செய்யப்பட்டிருந்தாலோ இந்த சட்டத்தின்மூலம் வதந்தியை பரப்பியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வதந்தியை பரப்பிய பள்ளி மாணவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து மனித உரிமை வக்கீல் சொவ் சே, எனது வலைப்பதிவுகளை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படிக்கின்றனர். எனவே இனி நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாங்கள் கைது செய்ய வாய்ப்புள்ளது.

இதற்காக வாய்மூடி மௌனமாக இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.