நெற்றி பகுதியில் மூக்கு: சீனாவில் அதிசயம்

Written by vinni   // September 26, 2013   //

nose_china_man_002சீனாவை சேர்ந்த ஜியோலியன் என்பவருக்கு நெற்றியில் மூக்கு வளர்ந்துள்ளது.
சீனாவை சேர்ந்த ஜியோலியன்(வயது 22) என்பவருக்கு கடந்தாண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதற்காக அவர் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால், குருத்தெலும்பு முற்றிலுமாக சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது.

இதனை மருத்துவர்களால் சரிசெய்ய முடியாத காரணத்தால், தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கை உருவாக்க முடிவு செய்தனர்.

இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது.

இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Similar posts

Comments are closed.