விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு பீரங்கி காட்சி பொருளானது

Written by vinni   // September 26, 2013   //

AntiAirCraftMissile_4_thumb4விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு பீரங்கியை ராணுவம் காட்சி பொருளாக வைத்துள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிட விமான எதிர்ப்பு பீரங்கி, நீர் மூழ்கி கப்பல் போர் விமானம் மற்றும் ராணுவ தளவாடங்களை பயன்படுத்தினார்கள்.

இறுதிக் கட்ட போரில் சிங்கள ராணுவம் நயவஞ்சகத்துடன் செயல்பட்டு விடுதலைப்புலிகளையும் அப்பாவி மக்களையும் கொன்று குவித்தது. அப்போது விடுதலைப்புலிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியது.

அவற்றை காட்சி பொருளாக வைத்து சிங்கள ராணுவம் பணம் சம்பாதிக்கிறது. புதுக்குடியிருப்பில் உள்ள மந்துவில் பிரதேசத்தில் இந்த ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்துள்ளது.

ஏற்கனவே விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் ஆட்டிலறி எறிகணைகளை இலங்கை ராணுவம் காட்சிப் படுத்தி வைத்து உள்ளது. தற்போது புதிதாக விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் ஏவுகணைகளையும் கண் காட்சியாக வைத்துள்ளது.

இந்த கண்காட்சிக்கு அருகே ராணுவமே கேண்டீன்கள், சிறிய கடைகள், டீக்கடைகள், குளிர்பான கடைகளை தொடங்கியுள்ளது. தெற்கு இலங்கை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை பார்த்து வியந்து செல்கிறார்கள்.


Similar posts

Comments are closed.