காமன்வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்தக் கூடாது : சிங்கள அரசை காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும்

Written by vinni   // September 26, 2013   //

Commonwealthஇனக்கொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக, சிங்கள அரசை காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும். காமன்வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்தக் கூடாது. மீறி நடந்தால் இந்தியாவும் பிற காமன்வெல்த் உறப்பு நாடுகளும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார். இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தொடர்ந்து கோரிக்கைகளை வென்றெடுக்கவும், இலங்கையில் கான்வெல்த் எதிர்ப்பியக்கம் 26.09.2013 வியாழக்கிழமை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரப் போராட்டத்தை மேற்கொண்டது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக மல்லை சத்யா, பேராசிரியை சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Similar posts

Comments are closed.