போனஸ் ஆசனத்தை முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு

Written by vinni   // September 26, 2013   //

TNA-logoமுஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் ஆசனத்தை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நடைபெற்று முடிந்த வட மாகணாசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. இவற்றில் ஒரு ஆசனத்தை மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அயூப் நஸ்மீன் என்பவருக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்பட உள்ளது. ஏனைய போனஸ் ஆசனம், ஐந்து மாவட்டங்களி;லும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்களில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு தலா ஒரு ஆண்டு வீதம் மாகாணசபை உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளது.

வட மாகாணசபைக்காக முதலமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும். இதன் அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பது குறித்து இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது


Similar posts

Comments are closed.