கடலில் குட்டித் தீவினை உருவாக்கிய பூகம்பம் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // September 25, 2013   //

newisland_pakistan_001பாகிஸ்தான் நாட்டில் தென்மேற்கு பகுதியை உலுக்கிய பூகம்பமானது கடலில் புதிய குட்டித்தீவு ஒன்று தோன்றி உள்ளது.
சுமார் 60 மீற்றர் நீள அகலத்தில் தோன்றியுள்ள இந்த தீவின் மணல் பகுதி சுமார் 20-30 மீற்றர் உயரத்துக்கு உயர்ந்துள்ளது.

60 ஆண்டுகளுக்கு முன்பு மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இது போன்ற தீவு உருவாகி இருந்தது.

நாளடைவில் அந்த தீவு கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது. தற்போது பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிய குட்டித்தீவு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலோரத்தில் திரண்டு அந்த புதிய குட்டித் தீவை பார்த்துள்ளனர். இந்த தீவு 100மீ சுற்றளவு கொண்டுள்ளது.

கடற்கரையிலிருந்து ஒருமைல் தூரத்தில் இருப்பதால் இந்தத் தீவு கண்களுக்குத் தெரிந்துள்ளது.

இவ்வளவு பெரிய பூகம்பத்தின் விளைவாக இதுபோன்று குட்டித் தீவு தோன்றுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்று ஜாகித் ரபி என்ற பூகம்ப ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்க பூகம்ப ஆய்வு மைய நிபுணர் கூறுகையில், பொதுவாக தீவு தோன்றுவது அரிதானது என்றும் தீவு தோன்றும்போது பேரலைகள் எழும் எனவும் கூறியுள்ளார்.

இந்த பூகம்பத்தினால் 200க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.


Similar posts

Comments are closed.