கல்யாணம் முடிந்த கையோடு உயிரை விட்ட பெண்

Written by vinni   // September 25, 2013   //

marriage-death_001சீனாவில் கடந்த இரண்டு வருடங்களாக கோமா நிலையில் இருந்த பெண்ணாருவர் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் மரணத்தை தழுவிய நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தென்கிழக்கு சீனாவில் குவாங்டொங் எனும் இடத்தை சேர்ந்த ஹீ ஜிங்ஜிங் என்பவருக்கும் லு லாய் என்ற அவரது காதலருக்கும் 2011ம் ஆண்டில் திருமணம் நடைபெறுவதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒருநாள் வேலைக்குச் சென்ற ஜிங்ஜிங் திடீரென உடல் நலமின்றி போய் கோமா நிலைக்கு உள்ளாகி விட்டார்.

மேலும் கடந்த இரு வருடங்களாக மீளாத கோமா நிலையில் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடனேயே அவர் உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜிங்ஜிங்கின் 28வது பிறந்த நாளில் அவருக்கு அவரது காதலரான லு லாயை திருமணம் செய்து வைத்த பின் அவரது உயிர்காப்பு உபகரணங்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி மருத்துவமனையில் படுத்த படுக்கையாக சுய உணர்வு இன்றி இருந்த ஜிங்ஜிங்கை லு லாய் திருமணம் செய்தார். இந்த திருமணத்தின் ஓர் அங்கமாக பிறந்தநாள் கேக்கும் வெட்டப்பட்டது.

இது குறித்து லு லாய் கூறுகையில், எங்கள் திருமணத்தை விமர்சையாக நடத்த திட்டமிட்டிருந்தோம். அதற்கு பணம் தேவைப்பட்டது. அதனால் அலுவலகத்தில் அதிக நேரம் பணியாற்ற வேண்டியிருந்தது.

அளவுக்கதிகமான வேலைப் பளு காரணமாக ஜிங்ஜிங் சுகவீனமடைந்தாள். அவள் சுகவீனமடைந்த நிலையிலும் வேலைக்கு செல்வதை நிறுத்தவில்லை.

இறுதியில் அவள் தனது கணனியில் வேலை செய்து கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்தாள். அந்த மயக்கம் கடைசி வரை நீங்கவில்லை. அவள் எனது இதயத்தில் எப்போதும் வாழ்கிறாள் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் மரணமான ஜிங்ஜிங்கின் உடல் உறுப்புக்கள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.