நவநீதம்பிள்ளையின் கடிதம் வெளிவிவகார அமைச்சினை வந்தடையவில்லை

Written by vinni   // September 25, 2013   //

Navaneetham-pillay1தான் தெரிவித்ததாகக் கூறி பொய்யான முறையில் வெளியிடப்பட்ட கருத்துகளைத் திருத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசைக் கேட்டுள்ளமை தொடர்பான கடிதம் இன்னும் வெளிவிவகார அமைச்சினை வந்தடையவில்லை என அந்த அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

நவிபிள்ளை அண்மையில் இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டிருந்த போது கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள சிங்கள அரசியல் தலைவரான டி. எஸ். சேனநாயக்காவின் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு அவர் அரச தலைவரைக் கேட்டிருந்தார் என செய்திகள் வெளிவந்திருந்தன.

இதனை மறுத்திருந்த நவிபிள்ளை, இலங்கை அரசு தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகக் கூறியிருந்தார்.

உண்மைக்கு மாறான இவ்வாறான கருத்துகளை உடனடியாகச் இலங்கை அரசு திருத்திக் கொள்ள வேண்டுமென்றும் நவிபிள்ளையின் அலுவலகம் இலங்கை அரசைக் கேட்டிருந்த்து.

ஆனால், இது தொடர்பான வேண்டுகோளைக் கொண்ட கடிதம் தமது அமைச்சை இன்னமும் வந்தடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.