விந்தணுக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் சில ஆரோக்கியமற்ற செயல்கள்!

Written by vinni   // September 24, 2013   //

Free-shipping-The-new-fashion-2013-classic-font-b-jeans-b-font-The-font-b-boyதற்போது நிறைய ஆண்கள் விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் மோசமான பிரச்சனை தான் இந்த விந்தணு குறைபாடு. இத்தகைய விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கு வேறு எந்த ஒரு பாக்டீரியாவோ அல்லது கிருமிகளோ காரணம் இல்லை. இதற்கு முக்கிய காரணமே நாம் தான்.

 எப்படியெனில், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பழக்கவழக்களின் விளைவுகளும் ஒவ்வொரு பிரச்சனையின் வாயிலாகத் தான் தெரியும். அப்படி ஆண்கள் மேற்கொள்ளும் ஒருசில பிரச்சனைகளின் முடிவு தான் விந்தணு குறைபாடு. அதிலும் தற்போதைய ஆண்கள் 30 வயதிலேயே விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஸ்டைல் என்று தினமும் அடிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற சில வாழ்க்கை முறையின் காரணமாகவும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. இப்போது கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் விந்தணு குறைபாட்டிற்கு வழிவகுக்கும் சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களைப் பார்ப்போமா!!!

 ஆண்களுக்கு விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களில் முதன்மையானது தான் புகைப்பிடிப்பது. இதனால் சிகரெட்டில் உள்ள புகையிலை விந்தணுக்களை அழித்து, அதன் உற்பத்தியைக் குறைத்துவிடும்.

 ஜங்க் உணவுகளில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் கிடையாது. அதில் வெறும் கொழுப்புக்கள் மட்டும் தான் உள்ளது. ஆகவே கருத்தரிக்க முயலும் போது, ஜங்க் உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடலில் விந்தணுக்களை உற்பத்தி செய்ய தேவையான சத்துக்கள் கிடைக்காமல், விந்தணு குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.

 தினமும் போதிய தூக்கம் இல்லாவிட்டால், உடலானது ஆற்றலின்றி சோர்ந்துவிடும். இவ்வாறு உடல் சோர்வடைந்தால், விந்தணுக்கள் செயல்படுவதற்கு போதிய ஆற்றல் இல்லாமல், அதன் சக்தி குறைந்துவிடும். இதனால் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படும்.

 உள்ளாடையை இறுக்கமாக அணிந்தால், விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு தடைப்படும். எனவே எப்போதும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.

 நிறைய ஆண்களுக்கு தங்களது மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு வைக்கும் போது, மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்றும் அதிர்வு, விதைப்பைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் தடைபடும்.

 உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகளாலும் விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். அதிலும் வைரஸ் நோய்த்தொற்றுகளான டெங்கு, சின்னம்மை போன்றவற்றாலும் விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படும்.

 நாளமில்லா சுரப்பிகள் போதிய அளவில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் உற்பத்தி செய்யாவிட்டால், விந்தணுக் குறைபாடு ஏற்படும்.

 பெரும்பாலானோருக்கு லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்யும் பழக்கம் உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு உள்ளது. இவ்வாறு நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்தால், அதிலிருந்து வெளிவரும் வெப்பம் விதைப்பையை வெப்பமடையச் செய்து, விந்தணுக்களை அழிக்கும்.

 உடல் பருமன் என்பது தைராய்டு சுரப்பியானது சரியாக செயல்படாமல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, அதனால் உடல் பருமனை உண்டாக்கி, விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்துகிறது.

 ஆல்கஹாலை அதிகம் பருகினால், ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைந்து, இறுதியில் விந்தணு குறைபாட்டை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் இதனால் ஆண்மை குறைபாடு கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.

 உடலின் ஆரோக்கியத்தை கெடுப்பதில் முதன்மையானது தான் மன அழுத்தம். அத்தகைய மன அழுத்தம் அதிகரித்தால், அது விந்தணுவின் எண்ணிக்கையையும் குறைந்துவிடும்.

 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையானது, விந்தணுவின் தரத்தைக் குறைத்துவிடும்.

 ஃபேஷன் என்பதற்காக இறுக்கமாக ஜீன்ஸ் அல்லது பேண்ட் அணிந்தால், அது விந்தணுவின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அதன் உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் நீண்ட நேரம் இறுக்கமாக அணிவதால், விதைப்பையானது வெப்பமடைந்து, விந்தணுக்கள் அழிந்துவிடும்.

 உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்வதற்கு சில ஆண்கள் ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொண்டால், அது இனப்பெருக்க மண்டலத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கும். மேலும் ஸ்டெராய்டு விதைப்பையை சுருக்கி, விந்தணுவின் எண்ணிக்கையையும் குறைத்துவிடும்.

 ஆண்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று தான் வண்டி ஓட்டுவது. ஆனால் தினமும் 3-4 மணிநேரம் தொடர்ச்சியாக வண்டியை ஓட்டினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விதைப்பையை வெப்பமடையச் செய்து விந்தணுவை அழித்துவிடும்.


Similar posts

Comments are closed.