தமிழ் வாக்காளர்கள்-வேட்பாளர்களை ராணுவம் மிரட்டியது: சர்வதேச பார்வையாளர்கள் தகவல்

Written by vinni   // September 24, 2013   //

f9cdce4f-5feb-46bf-bc3d-69ecf221aabe_S_secvpfஇலங்கையில் 25 வருடங்களுக்கு பிறகு தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்திற்கு சனிக்கிழமையன்று தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 38 இடங்களில் 30-ல் தமிழ் தேசிய கூட்டணி கட்சியினர் வெற்றிப்பெற்றுள்ளனர். இந்த தேர்தலின் போது வாக்காளர்களையும், வேட்பாளர்களையும் ராணுவம் மிரட்டியது என்று கென்யா முன்னாள் துணை அதிபரான ஸ்டீபன் கொலோன்சோ முஸ்யோகா தலைமையிலான 4 பேர் கொண்ட காமன்வெல்த் பார்வையாளர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்குழு கூறியுள்ளதாவது:-

வடக்கு மாகாண நம்பகமான தேர்தல் நடவடிக்கைகளில் ராணுவத்தினரின் ஆதிக்கம் மிகவும் தடையாக இருந்துள்ளது. வேட்பாளர்கள் சுதந்திரமாக வாக்களர்களை சந்தித்து வாக்குகோர முடியாதவாறு அப்பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளும், ஆதிக்கமும் இருந்துள்ளது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

ஒரு குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டி ராணுவம் தொடர்ந்து தமிழ் வாக்காளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்களை மிரட்டி வந்ததாகவும் தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளன. சட்டசபை மற்றும் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் அங்கு மறுக்கப்பட்டுள்ளன.

தேர்தலின் போது ஊடகங்களின் நடவடிக்கைகள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்ற குற்றச்சாடுகள் வந்துள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

சார்க் நாடுகளின் 20 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழுவானது இந்திய முன்னாள் தேர்தல் ஆணையர் என். கோபல்சுவாமி தலைமையில் இலங்கை சென்று தேர்தலை பார்வையிட்டது. அவர் தேர்தலுக்கு முன்பு தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளரின் வீடு இராணுவத்தினரால் தாக்கப்பட்டது என்பது கவலையளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலின் போது ஒரு உள்ளூர் பார்வையாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். ராணுவத்தினர் வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்கி ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வலியுறுத்தியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.