ராஜபக்ஷவிடம் கேள்வி கேட்க விரும்பம் உள்ளவரா நீங்கள்? இதோ சந்தர்ப்பம்

Written by vinni   // September 24, 2013   //

M_Id_388725_Mahinda_Rajapaksaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமூக வலைத்தளம் ஊடாக கேள்வி கேட்பதற்கு தற்போது சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68வது அமர்வில் உரை நிகழ்த்தியதன் பின்னர் நியூயோர்க்கிலிருந்து டுவிட்டர் ஊடாக கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.

செப்டெம்பர் 24ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி ராஜபக்ஷ உரை நிகழ்த்தவுள்ளார். அதைத் தொடர்ந்து செப்டெம்பா 25ஆம் திகதி நியூயோர்க் நேரம் மு.ப. 9.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப.6.30) டுவிட்டர் ஊடாக கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்பெறும்.

கேள்வி பதில் நிகழ்ச்சி அரை மணித்தியாலம் நடைபெறும். இதன்போது முக்கியமாக ஜனாதிபதி ராஜபக்ஷ நியூயோர்க்கில் இவ்வார நடவடிக்கை பற்றியும் ஐ.நா. அமர்வு பற்றியும் கவனம் செலுத்தப்படும்.

ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க இக்கேள்வி பதில் நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார். இது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் ஊடாக நடைபெறும். (@PresRajapaksa)

கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு குறுகிய நேரமே ஒதுக்கப்பட்டிருப்பதால் ஜனாதிபதியிடம் கேள்வி கேட்க ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்விகளை காலதாமதமின்றி பதிவு செய்யவும். உங்கள் கேள்விகளைப் பதிவு செய்யும்போது #AskMR எனப் பதிவு செய்க.


Similar posts

Comments are closed.