இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் நடைபெற வேண்டும் – டேல் ஸ்ரெய்ன்

Written by vinni   // September 24, 2013   //

இந்திய அணி தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் சிறப்பாக அமையும் என தென்னாபிரிக்க ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்ரெய்ன் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையில் தென்னாபிரிக்காவில் இடம்பெற எதிர்பார்க்கப்பட்ட தொடர் தொடர்பாகச் சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

delநவம்பர் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இத்தொடர் 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள், 7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த போட்டி அட்டவணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, அதில் மாற்றங்களைக் கோரியிருந்தது. அத்தோடு, 3ஆவது டெஸ்ட் முடிவடையும் நாளிலேயே நியூசிலாந்திற்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியையும் ஆரம்பிக்க முடிவு செய்திருந்தது. இதன் காரணமாக இத்தொடர் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடருக்காக இந்தியாவிற்கு வந்துள்ள டேல் ஸ்ரெய்ன், இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் இடம்பெறுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்குமிடையில் சிறப்பான போட்டித்தன்மை காணப்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் சண் றைசர்ஸ் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றும் டேல் ஸ்ரெய்ன், தனது அணியின் தலைவரான ஷீகர் தவானை அத்தொடரில் சந்திக்க ஆவலுடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷீகர் தவான் மிகச்சிறப்பான ஃபோர்மில் உள்ளதாகக் குறிப்பிட்ட டேல் ஸ்ரெய்ன், அவரை தென்னாபிரிக்கத் தொடரில் சந்திக்க ஆவலுடன் காணப்படுவதாகவும், இருவருக்குமிடையிலான போட்டி மிகச்சிறப்பான போட்டியாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.