அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக மியன்மார் எதிர்கட்சித் தலைவர் உறுதி

Written by vinni   // September 24, 2013   //

suu-kyiநாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக மியன்மாரின் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி உறுதியளித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு மியன்மாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள அரசிலயமைப்பு ஜனநாயகமற்ற ஒன்றென சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி கருதுவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இராணுவத்தினருக்கு குறிப்பிடத்தக்க பாராளுமன்ற ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சூகி தகுதி இழப்புச் செய்யப்பட்டுள்ளதாலும் குறித்த கட்சி இந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.