மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது

Written by vinni   // September 24, 2013   //

Mandela_2_0தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நுரையீரல் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருதை நெல்சன் மண்டேலா சார்பில் அவரது மகள்கள் ஜின்ட்ஜி மண்டேலா, ஜோசினா மாசெல் பெற்றுக் கொண்டனர்.


Similar posts

Comments are closed.