மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்ட பாரக் ஒபாமா

Written by vinni   // September 24, 2013   //

US President Barack Obama speaks duringஅமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, தான் மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்டதாக கூறியிருக்கிறார்.

நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாரக் ஒபாமா, கூட்டத்தின் முடிவில் அருகில் இருந்த நபரிடம் நான் கடந்த 6 வருடங்களாக சிகரெட்டை தொடவில்லை. என் மனைவி மீது எனக்கு பயமிருப்பதால் புகைப்பழக்கத்தை முற்றிலுமாக விட்டுவிட்டதாக கூறியிருக்கிறார்.

ஒபாமா கூறியப்போது, பொதுவாக கடந்த 6 ஆண்டுகளாக நான் சிகரெட் பிடிப்பதில்லை. ஏனெனில் நான் எனது மனைவிக்கு பயந்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்றார்.

ஒபாமாவின் இந்த உரையாடலை அங்கிருந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பதிவு செய்து அதை ஒளிப்பரப்பினார்.

2010 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒபாமா கடந்த 9 மாதங்களாக சிகரெட் பிடிக்கவில்லை என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

புகைப்பழக்கம் உடைய ஒபாமாவை பற்றி நிறைய விமர்சனம் எழுந்ததும், தனது கணவர் 2 மகள்கள் முன்பு சிகரெட்டை தொடுவது கூட இல்லை என அவரது மனைவி மிசேல் ஒபாமா தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.