அதிக விருப்பு வாக்கு பெற்றவர்களுக்குத்தான் முதலமைச்சர் என்றில்லை – சுசில்

Written by vinni   // September 24, 2013   //

 

susilமாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

எனினும் அதிக விருப்பு வாக்கு பெற்றவர்களுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என சுசில் பிரேமஜயந்த் கூறியதாக இன்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன.

ஆனால் இந்தவொரு பத்திரிகைக்கும் தான் அப்படி கூறவில்லை என சுசில் அத தெரணவிடம் தெரிவித்தார்.

அவர் அளித்த பதில் வருமாறு:-

“பத்திரிகைகளில் இருப்பது பொய். எந்த பத்திகையில் உள்ளது. இருந்தால் வீசி எறிவேன். அவர்களுக்கு வேண்டியதுபோல் அழுக்குகளை போட முடியாது. நான் எந்தவொரு பத்திரிகைக்கும் பேசவில்லை. பத்திகையாளர் சந்திப்பு நடத்தியது மாத்திரம்தான். எந்தவொரு பத்திரிகைக்கும் கதைக்கவில்லை. அவர்களும் என்னிடம் கதைக்கவில்லை.”


Similar posts

Comments are closed.