காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.பி. இந்தர்ஜித்சிங் திடீர் விலகல்

Written by vinni   // September 24, 2013   //

 india congressடெல்லி புறநகரான குர்கானில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் இந்தர்ஜித்சிங்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் அரியானா மாநிலத்தில் செல்வாக்கு மிக்கவர் ஆவார். அரியானா மாநில மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட்வதேரா குர்கான் பகுதியில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி பலகோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. ராபர்ட்வதேரா போலி ஆவணங்களை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. என்றாலும் அரியானாவில் புபிந்தார்சிங் கூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவதால் ராபர்ட்வதேரா மீதான குற்றச்சாட்டுக்களை மறைக்கும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குர்கான் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான இந்தர்ஜித்சிங், நில மோசடி தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார் ராபர்ட் நிலம் வாங்கி விற்றது பற்றி சி.பி.ஐ. விசாரித்து உண்மையை தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதனால் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இந்தர்ஜித்சிங் எம்.பி.க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது மகள் ‘‘அரியானா இன்சாப் காங்கிரஸ்’’ என்ற கட்சியை தொடங்கினார்.

இந்த நிலையில் இன்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்தர்ஜித்சிங் விலகினார். ராஜினாமா கடிதத்தை அவர் சோனியாவுக்கு அனுப்பி உள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்ய போவதாக அவர் கூறினார்.

 


Similar posts

Comments are closed.