வடமாநிலங்களில் நிலநடுக்கம்

Written by vinni   // September 24, 2013   //

earthடெல்லி மற்றும் வடமாநிலங்களில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவாக பதிவாகியிருந்தது. இதனால் அங்கு அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி மற்றும் வடமாநிலங்களில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்ததான வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து 3 முறை நிலஅதிர்வு உணரப்பட்டது. இதில் வீடுகள் லேசாக குலுங்கின. ஆனால் சேதம் தொடர்பான உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.


Similar posts

Comments are closed.