வடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கினால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

Written by vinni   // September 24, 2013   //

ravanaவடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்று உருவாக்கப்படும்.

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி விக்னேஸ்வரனுக்கு தனி இராச்சியம் அமைக்க இடமளிக்க முடியாது.

13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிட்டால், இந்தியாவைப் பயன்படுத்தி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு முயற்சிக்கும்.

மீண்டும் பயங்கரவாதத்தை தூண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என ராவணா பலய தெரிவித்துள்ளது,


Similar posts

Comments are closed.