பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவது ஏற்புடையதல்ல

Written by vinni   // September 24, 2013   //

Commonwealthஇலங்கை அரசு ஒரின சேர்க்கையாளர்களையும் மனித உரிமைகள் பாதுகாவலர்களையும் துன்புறுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள பொதுநலவாய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் தலைவர் கலாநிதி பூர்ண சென், இவ்வாறான ஒரு நாட்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள்  மாநாட்டை நடத்துவது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டார்.

பிரித்தானியா Brighton இல் இடம்பெற்ற தொழில்கட்சி நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறாக தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது அமர்வு எதிர்வரும் நவம்பரில் இலங்கையில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளை இலங்கை பின்பற்ற வேண்டும்.

எனவே பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது ஒரின சேர்க்கையாளர்களின் மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை காப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும் சென் கோரியுள்ளார்.

அதேவேளை, இலங்கையின் அரசியல் அமைப்பின் 365ஏ சரத்தின்படி ஒரே இனத்தில் பாலியல் உறவு கொள்ளுதல் குற்றமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.