தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவு நிகழ்வில் கலந்து கொண்ட‌ ‘தயா மாஸ்டர்’

Written by vinni   // September 23, 2013   //

daya_masterஇன்று மாலை ரில்கோ ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக அக் கட்சியால் தெரிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் திடீரென வந்து கலந்து கொண்டுள்ளார். தயா மாஸ்டர் அவர்கள் டான் ரீவியின் முக்கிய பொறுப்பில் இருந்தவராவார். இவர் அரசியலில் கலந்த பின்னர் டான் ரீவியின் பொறுப்பில் இருந்து இவரை விடுவித்ததாக டான் ரீவியின் உரிமையாளர் குகநாதன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் இவர் சுதந்திரக் கட்சியால் ஒதுக்கப்பட்டு வேட்பாளராக தெரிவு செய்யப்படாத நிலையில் இருந்துள்ளார். இந் நிலையில் எவரும் எதிர்பார்க்காத வண்ணம் இவர் ரில்கோ ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரு போனஸ் ஆசனங்கள் வடக்கு மாகாண சபைக்கு கிடைத்துள்ள நிலையில் சில வேளை அவ் ஆசனத்தில் ஒன்று தனக்கும் வழங்கப்படலாம் என எண்ணி இவர் அங்கு வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இதே வேளை இவர் அக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற ஊடகவியலாளரை கூப்பிட்டு ‘குழப்பும் வகையில் உங்கள் ஊடகத்தில் செய்தியை வெளிவிட வேண்டாம். இது எனது கடும் எச்சரிக்கை ‘ எனவும் எச்சரித்துள்ளார். தயா மாஸ்டர் தற்போது டான் ரீவியில் பணி புரிகின்றாரா என்பது தெரியாதபடியால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர வந்துள்ளார்� என்றே தர்க்க ரீதியில் கருத இடமுள்ளது. அவர் டான் ரீவியில் தற்போதும் பணி புரிந்தால் ஒரு ஊடகவியலாளரை இன்னொரு ஊடகவியலாளர் எச்சரிப்பது என்பது வேடிக்கையான விடயமாகவே கருத இடமுள்ளது.

இவர் டான் ரீவியில் தொடர்ந்து வேலை செய்கின்றாரா என்பதை டான் ரீவி முதலாளி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு வேளை தயா மாஸ்டர் தற்போதும் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் என்ற தோரணையில் இருக்கின்றாரோ?? என எண்ணத் தோன்றுகின்றது.


Similar posts

Comments are closed.