தேர்தலில் மக்கள் தோல்வியடைந்துள்ளனர் – ஐ.தே.க

Written by vinni   // September 23, 2013   //

 UNP8712நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தோல்வியைத் தழுவியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வலுவான ஓர் செய்தியை சொல்வதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுகளினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை எனவும், மக்களே அதிகள நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவுமு; அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் தந்திரோபாயம் மீண்டும் ஒரு தடவை வெற்றியடைந்துள்ளதாகவும், மக்கள் தங்களது பொறுப்புணர்ச்சியிலிருந்து விலகிச் செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் வீழ்ச்சியடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.