இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Written by vinni   // September 23, 2013   //

hockey21 வயதுக்குள்பட்டோர் தி சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இங்கிலாந்தை, இந்தியா வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வெற்றி கொண்டது. ரவுண்ட் ராபின் முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆட்டத்தின் 18-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ரமன்தீப் சிங் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.

ஆட்டத்தின் 50-ஆவது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் தல்விந்தர் சிங் மற்றொரு கோலடித்தார். இதையடுத்து இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் ராம் பிரெஞ்ச் ஆட்டத்தின் 67-ஆவது நிமிடத்தில் ஒரு கோலடித்து முன்னிலையைக் குறைத்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியினர் தற்காப்பு ஆட்டத்தை மேற்கொண்டனர். இதனால் ஆட்ட முடிவு வரை இங்கிலாந்து அணியினரால் அடுத்த கோலைப் போட முடியவில்லை. இதையடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணியினர் தங்களுக்குக் கிடைத்த 4 பெனல்டி கார்னர் வாய்ப்புகளை வீணாக்கினர். ஒரு பெனல்டி கார்னரையும் அவர்கள் கோலாக்கவில்லை. இந்திய அணியின் அனைத்து முயற்சிகளையும் இங்கிலாந்து கோல்கீப்பர் தடுத்துவிட்டார்.

இதே நேரத்தில் இங்கிலாந்து அணியினர் தங்களுக்குக் கிடைத்த 6 பெனல்டி கார்னர் வாய்ப்புகளில் ஒன்றை மட்டும் கோலாக்கினர்.


Similar posts

Comments are closed.