‘உறை பனி அறையில்’ பயிற்சி பெற்ற இளவரசர் ஹாரி (வீடியோ இணைப்பு)

Written by vinni   // September 23, 2013   //

harry_antartica_practice_002பிரிட்டன் இளவரசர் ஹாரி விஷேடமாக வடிவமைக்கப்பட்ட உறைபனி அறையில் 20 மணி நேரம் தங்கி இருந்தார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லசின் 2வது மகன் இளவரசர் ஹாரி.

29 வயதான இவர் வரும் நவம்பர் மாதம் நன்கொடை திரட்டும் முயற்சியாக பூமியின் தென்கோடியான அண்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

எனவே, உறைபனி கண்டமான அண்டார்டிகாவில் தங்குவதற்கு முன்னோட்டமாக செயற்கையாக அமைக்கப் பட்ட அறைகளில் தங்கி ஹாரி ரி பயிற்சி எடுத்துக் கொள்கிறார்.

அண்டார்டிகாவுக்கு ஹாரி தலைமையில் ஒரு குழுவும், சுவீடன் நாட்டு நடிகர் அலெக்ஸ்டாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் தலைமையிலான அமெரிக்கக் குழுவும், ஆங்கில நடிகர் டொமினிக் வெஸ்ட் தலைமையிலான கொமென்வெல்த் குழுவும் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இப்பயணமானது பனி படர்ந்த அண்டார்டிகா கண்டத்தில் 208 மைல் கடினமான பயண தூரத்தை உள்ளடக்கியது ஆகும்.

அண்டார்டிகாவில் மிகவும் குளிர் காலமான நவம்பரில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரி செல்சியசாக இருப்பதோடு, மணிக்கு 45 மைல் வேகத்தில் குளிர்காற்றும் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதலால், பயணத்தின் போது கடும் குளிரையும், பனிக்காற்றையும் தாங்கும் வகையில் இளவரசர் ஹரி பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று தான் இந்த உறை பனி அறை.

இதற்கென பிரத்யேகமாக இங்கிலாந்தில் உள்ள நுனேட்டம் எனும் இடத்தில் விஷேட அறை அமைக்கப்பட்டு, அந்த அறையில் ஹரி தங்க வைக்கப்பட்டார்.

அந்த உறைபனி அறையில் தங்கிய போது, அண்டார்டிகா பயணத்தின் போது அணிய வேண்டிய பிரத்யேக உடையை அணிந்து கொண்டாராம் ஹாரி.

கிட்டத்தட்ட 20 மணி நேரங்கள் அந்த அறைக்குள் இருந்த ஹாரியுடன் அந்த குழுவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 4 பேரும் தக்கி பயிற்சி பெற்றனர்.

தொண்டு நோக்கத்துடன் 3 குழுவினரால் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணமானது கிட்டத்தட்ட 15 நாட்கள் நீடிக்கும் என்று சொல்லப் படுகிறது.


Similar posts

Comments are closed.