சீனாவை தாக்கியது ‘உசாகி’ புயல்: 20 பேர் பலி

Written by vinni   // September 23, 2013   //

ntrl_disaster_china_floodபிலிப்பின்ஸ் மற்றும் தைவானைத் தொடர்ந்து உசாகி புயல் ஹாங்காங் மற்றும் சீனாவின் தெற்கு கடலோரப்பகுதிகளை தாக்கியது.
மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் தாக்கிய இப்புயலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். குவாங்டாங் மற்றும் ஃபுஜியன் நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் முன்னெச்சரிக்கையாக 8-ஆம் எண் புயல் எச்சரி‌க்கை ஏற்றப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன.


Similar posts

Comments are closed.