இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கடல் எல்லையில் கைது

Written by vinni   // September 23, 2013   //

01VBG_FISHERMEN_261436fஇந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோர காவல் படையினரால் இவர்கள் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னைக்கு வட கிழக்கே 163 கடல் மைல் தூரத்தில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 இலங்கை மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2 மாதங்களில் 32 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 6 மீன்பிடி படகுகள் மற்றும் ஆயிரத்து 905 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்திய கடலோர காவல் படையினரின் கிழக்குப் பகுதி மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Similar posts

Comments are closed.