பிரான்ஸ் விமானத்தில் 1300 கிலோ கோகைன் போதைமருந்து மீட்பு

Written by vinni   // September 23, 2013   //

cocoinவெனிசுவேலாவின் காரகாசிலிருந்து பிரான்சின் தலைநகர் பாரிசுக்கு வந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் வந்த

30 பெட்டிகள் எந்தப் பயணியின் பெயரிலும் பதிவு செய்யப்படவில்லை.
சந்தேகப்பட்ட விமான நிலைய அதிகாரிகள் அவற்றைப் பிரித்து சோதனையிட்டபோது 1300 கிலோ எடையுள்ள சுத்தமான கோகைன் போதை மருந்துப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு 200 மில்லியன் டொலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல் அந்நாட்டு அதிகாரிகளால் நேற்றுதான் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் மானுவல் வல்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டு காவல்துறைகளும் பிரான்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கடத்தல் குறித்து விசாரித்து வருகின்றார்கள்.

கடத்தல் காரர்களை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வருகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுவெலாவிலும் கோகைன் கடத்தல் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கி வரும் போதை மருந்து தடுப்பு குழுவினருடன் அந்நாட்டின் பொது அமைச்சக வழக்கறிஞர்களும் குறிப்பிட்ட காலத்தில் அங்கு ஏதேனும் குற்ற நடவடிக்கை நடந்ததா என்பது குறித்து விசாரிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.