எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஈரானின் அணுவாயுத அணிவகுப்பு

Written by vinni   // September 23, 2013   //

newஈரான் அணுஆயுதங்களை நிறைய சேமித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது சில பொருளாதாரத்தடையை கொண்டுவந்துள்ளது.

இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது. ஆனால், ஈரான் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது.

இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே நடந்த போரின் நினைவுதினம் முன்னிட்டு நேற்று ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய 30 ஏவுகணைகளை ட்ரக்குகளில் வைத்து அணிவகுப்பு நடத்தப்பட்டன. இதன் மூலம் தனது எதிரி நாடுகளுக்கு ஈரான் ஒரு எச்சரிக்கை மணி அடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதில் 12 செஜில் மற்றும் 18 காதர் ஏவுகணைகள் இடம்பெற்றன. இந்த இரு ஏவுகணைகளும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அரேபிய ஏவுதளங்களை குறிவைத்து தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த அணிவகுப்பில் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரஹானி, காட்சிக்கு வைக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் தற்காப்புக்காக மட்டுமே என்று வலியுறுத்தினார். 200 வருடங்களில் எந்த ஒரு நாட்டையும் ஈரான் தாக்கியது கிடையாது என்றும் அப்போது அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.