மோடி ஒரு நவீன இராவணன்: சீறும் பிருந்தா கரத்

Written by vinni   // September 23, 2013   //

printhaபாஜவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு ராவணனை விட தலைகள் அதிகம் என மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத் விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயக மாதர் சங்கத்தின் 8வது மாநில மாநாடு நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா கரத் பேசுகையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து வகுப்புவாத சக்திகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

பாஜவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி ஒரு நவீன ராவணன். ராமாயணத்தில் வில்லனாக வரும் ராவணனுக்காவது 10 தலைகள்தான். ஆனால், நவீன ராவணனான நரேந்திர மோடிக்கு அதைவிட தலைகள் அதிகம்.

வகுப்புவாதத்தை தூண்டிவிடும் ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் என்று எண்ணிக்கையில் அடங்காத தலைகள் உள்ளன.

வகுப்புவாதத்தை தூண்டி விடும் சக்திகள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் மதச்சார்பின்மை செத்து போய் விடும்.

எனவே, வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை காப்பாற்ற தவறி விட்டது. மத்திய அரசுக்கு சொந்தமான உணவு கிடங்குகளில் 7,000 டன் உணவு பொருட்கள் வீணாகி கிடக்கின்றன.

ஏழை மக்களுக்கு கிடைக்காமல் அவற்றை எலிகள் தின்பது தேசத்துக்கே அவமானம் என்று கூறியுள்ளார்


Similar posts

Comments are closed.