ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய விஜய்!

Written by vinni   // September 23, 2013   //

Vijay @ Rajan Eye Care Hospitalபல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டும் தான் என்று நடிகர் விஜய் முதல்வர் ஜெயலலிதா பற்றி பெருமையாகப் பேசியுள்ளார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.

விழாவுக்கு இளையதளபதி விஜய் வருவாரா, மாட்டாரா என்று இருந்தது. விழாவுக்கு விஜய் அழைக்கப்பட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் விழாவில் கலந்து கொண்டார்.

விஜய்யில் கலந்துகொண்டு பேசிய விஜய், சினிமா 100 ஆண்டுகள் ஆனாலும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

சண்டை கலைஞர்களோ ரத்தம் சிந்த உழைப்பவர்கள். எதிர்பாராமல் நடப்பது விபத்து. ஆனால் விபத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் சண்டை கலைஞர்கள்.

ஒரு படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் ஆபத்தான காட்சியில் நடித்ததை அவரது மனைவியும், மகளும் கண்ணீர் பொங்க பார்த்துக் கொண்டிருந்தாங்க. அந்த காட்சியை என்னால மறக்கவே முடியாது.

மற்றொரு ஸ்டண்ட் கலைஞர் நெருப்பில் காரை ஓட்டும் காட்சியில் நடிக்க வேண்டும்.

அவர் அந்த காட்சியில் நடிக்கும் முன்பு தனது மகளிடம் போனில் பேசிவிட்டு வந்தார். ஏன் என்று கேட்டதற்கு காட்சி முடிந்த பிறகு என்னால் பேச முடியுமோ முடியாதோ அதனால் தான் என்றார்.

அவர் சொன்னதை கேட்டு அப்படியே கலங்கிவிட்டேன். மேலும் படத்தில் நீங்கள் கை தட்டி ரசிக்கிற ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் சில காயங்கள், சில வலிகள், ஏன் சில மரணங்கள் கூட உள்ளது.

தீயை அணைப்பவர்களை வீரர்கள் என்கிறோம். அப்படி என்றால் தீயோடு விளையாடும் ஸ்டண்ட் கலைஞர்களை எப்படி அழைப்பது?. அவர்களுக்கு என்னுடயை சல்யூட் என்று தெரிவித்துள்ளார் விஜய்.

நூற்றாண்டு விழா நடப்பது நமக்கெல்லாம் கவுரவம். ஒரு நடிகையாக வாழ்க்கையைத் துவங்கி, எதிர்ப்புகள், சவால்களை எல்லாம் முறியடித்து ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டுமே. இது ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களுக்கு கவுரவமான விஷயம் என்று விஜய் பேசியுள்ளார்.


Similar posts

Comments are closed.