வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குனசீலனின் ஆதரவாளர்கள் மீது நேற்று மாலை தாக்குதல்

Written by vinni   // September 23, 2013   //

Mannar-NP-Kunaseelan-posterவடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ . குனசீலனின் ஆதரவாளர்கள் மீது மன்னார்

தாராபுரம் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ஜீ . குனசீலன் தெரிவித்தார் .
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , , , ,
– நேற்று ஞாயிற்றுக்கிழமை எனது தெரிவு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்கள் ஆங்காங்கே வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் .
பின் நேற்று மாலை 5 மணியளிவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆசி பெற்ற பின் நானும் எனது ஆதரவாளர்கள் பெருந்திறளானர்வகள் ஒன்றினைந்து எனக்கு வாக்களித்த தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கு நன்றிகளை தெரிவிக்கச் சென்று அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து விட்டு எனது கிராமமான தோட்டவெளி கிராமத்திற்குச் செல்வதற்காக தாழ்வு பாடு – தாராபுரம் உள் வீதியூடாக சென்று பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது தாராபுரம் கிராமத்தினுள் வைத்து என்னுடன் வந்து கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது அங்கிருந்து ஓடி வந்தவர்களினால் தாராபுரம் பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இதனால் இரு தரப்பினர்களுக்கும் இடையில் மோதல் இடம் பெற்று பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது .
இதன் போது என்னுடன் வந்த ஆதரவாளர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் . எனது வாகனமும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் .
குறித்த சம்பவத்தை தொடர்ந்து தாராபுரம் கிராமத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .
இதே வேளை குறித்த தாராபுரம் கிராமத்தில் உள்ள அமைச்சரின் இணைப்பாளர் என் எம் . முனவ்பர் தெரிவிக்கையில் ,
– நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வடமாகாண சபை உறுப்பினர் ஜீ குனசீலனின் ஆதரவாளர்களினால் எமது கிராமத்தைச் சேர்ந்த சிலர் தாக்கப்பட்டுள்ளனர் . .
குறித்த தாக்குதலின் போது தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் நின்ற 3 முச்சக்கர வண்டி , வான் ஒன்றும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் .


Similar posts

Comments are closed.