குருநாத் மெய்யப்பன் உள்பட 22 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Written by vinni   // September 22, 2013   //

meyappanஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட மோசடி வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் உள்பட 22 பேர் மீது மும்பை போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட மோசடி நடைபெற்றதாக 4 மாதங்களுக்கு முன்பு மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன், நடிகர் தாரா சிங்கின் மகனான விண்டூ தாரா சிங் உள்ளிட்டோர் கைதாகினர்.

குருநாத் மெய்யப்பன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் என். சீனிவாசனின் மருமகன் ஆவார்.

ஐபிஎல் மோசடி விவகாரம் வெளிவந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்குதல் காரணமாக சீனிவாசன் பதவி விலகினார்.

இந்த நிலையில் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்ட 22 பேர் மீது மும்பை போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மும்பையிலுள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் உதய் பட்வாட் முன்னிலையில் சனிக்கிழமை இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றப்பத்திரிகை மொத்தம் 11,609 பக்கங்கள் கொண்டதாக உள்ளது.

இதில் குருநாத் மெய்யப்பன், விண்டூ தாரா சிங் ஆகியோர் மீது சூதாட்டப் பிரிவுகளில் மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஸ்பாட் ஃபிக்ஸிங் பிரிவில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Similar posts

Comments are closed.