வெடிகுண்டு அச்சுறுத்தல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் மஹேல ஜயவர்த்தன

Written by vinni   // September 22, 2013   //

mahalaஇலங்கையில் இருந்து புறப்பட்ட நிலையில் கிழக்கு லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வானுர்தியில் இலங்கையின் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்த்தனவும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையிலேயே வானுர்தி அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், நாளை மறுதினம் 24 ஆம் திகதி லண்டனில் நடைபெறவிருக்கின்ற முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் தலைவர்களின் ஒன்றுக் கூடலுக்காக மஹேல ஜயவர்த்தன பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் கிரிக்கட் டெஸ்ட் தலைவர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து அர்ஜூன ரணதுங்க, சனத் ஜெயசூரிய மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரும் லண்டன் செல்லவுள்ளார்கள்.


Similar posts

Comments are closed.