தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளி கற்பழிப்பு

Written by vinni   // September 22, 2013   //

rape01மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 28–ந்தேதி பெண் ஒருவர் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார். இரவு பணிக்கு வந்த டாக்டர் விஷால் வான்னே, அந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினார்.

அங்கு அவருக்கு மயக்க ஊசி போட்டு அவரை கற்பழித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டாக்டர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு அங்குள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் விஷால் வான்னேவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

ஆனால் டாக்டர் விஷால் வான்னேவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.


Similar posts

Comments are closed.