வடக்கில் பலமான மாகாண சபை அவசியம்

Written by vinni   // September 21, 2013   //

northern_mapநடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் மூலம் இலங்கையின் தமிழ் மக்கள் தமது குரல் ஓங்கி ஒலிக்க செய்த சந்தர்ப்பத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவித்தனர்.

தேர்தல் வாக்களிக்க வந்திருந்த மக்கள் பி.பி.சியிடம் இதனை கூறினார்.

மூன்று தசாப்த போருக்கு பின்னர் முதல் முறையாக வடக்கு மாகாண சபைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்ய மாகாணத்தில் பெருபான்மை தமிழர்களுக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அண்மைகாலமாக இலங்கை தமிழர்களின் அடையாளங்கள் பாதிப்புக்கு உள்ளாகியதாக கூறிய ஓய்வுபெற்ற தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர், மிகவும் பலவாய்ந்த மாகாண சபை வடக்கு அவசியமாக இருப்பதாக தெரிவித்தார்.

அதேவேளை வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றிருந்த இளம் யுவதி ஒருவர் கருத்து வெளியிடும் போது, தனது சொந்த இடம் அமைந்துள்ள பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் பகுதி எனவும் கடந்த 25 ஆண்டுகளாக தாம் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வPlற்ற நிலையில் தாம் இருப்பதாகவும் சொந்த இடத்தில் உள்ள வீட்டுக்கு சென்று வசிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் இந்த பெண் குறிப்பிட்டார். தமது சொந்த இடத்திற்கு சென்று சந்தேஷமாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் இந்த தேர்தலில் வாக்களித்ததாகவும் அவர் கூறினார்.

வடக்கில் இன்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் 60 முதல் 70 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

அச்சுறுத்தல், மிரட்டல் உட்பட சிறிய சம்பவங்கள் தவிர வடக்கில் பாரிய சம்பவங்கள் எதுவுமில்லாமல் தேர்தல் அமைதியான முறையில் நடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.