செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை

Written by vinni   // September 21, 2013   //

marsசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆண்டு (2012) செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.

அதை தொடர்ந்து கியூரியாசிட்டி தனது பணியை தொடங்கியது. செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு சுற்றுச்சூழல், தட்பவெப்பம் போன்றவற்றை ஆய்வு செய்து அதை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

உயிரினங்கள் வாழ மீத்தேன் வாயு அவசியமாகும் அதில்தான் கார்பன், ஹைட்ரஜன், அணுக்கள் உள்ளன. இவையே உயிரிணங்கள் வாழ்வதற்கான மூலக்கூறு ஆகும்.

எனவே அங்குள்ள வான் வெளியில் மீத்தேன் வாயு உள்ளதா? என கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு மேற்கொண்டது. ஆனால் மீத்தேன் வாயு இருப்பதை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை 6 தடவை மீத்தேன் குறித்த ஆய்வை கியூரியாசிட்டி மேற் கொண்டது. ஆனால் அவை இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.

இதற்கு முன்பு செவ்வாய் கிரக வான்வெளி காற்றில் 6–ல் ஒரு பங்கு மீத்தேன் வாயு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கியூரியாசிட்டி ஆய்வில் 1.3 பங்கு கூட இல்லை என தெரிய வந்துள்ளது.

எனவே செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை என்ற கருத்து நிலவுகிறது.


Similar posts

Comments are closed.