மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர்: ரொனால்டோ

Written by vinni   // September 21, 2013   //

mASIகிறிஸ்டியானோ ரொனால்டோவை விட மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர் என பிரேசில் நாட்டு முன்னாள் கால்பந்து ஆட்டக்காரர் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:

ஆர்ஜெண்டினா அணி பல சகலதுறை ஆட்டக்காரர்களைக் கொண்டுள்ளது. அதில் சிறந்த வீரரை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினம்.

பல வீடுகள் நமக்கு பிடித்திருந்தாலும், ஒரு வீட்டை தேர்ந்தெடுப்பது போல், நான் மெஸ்ஸியைத்தான் தேர்வு செய்வேன். அவர் என்னைப் போல் விளையாடுகிறார். பல முக்கிய தருணங்களில் அணிக்காக கோல் அடித்தும் வருகிறார்.

எனக்குப் போட்டியாக ஜிடேன், ரிவால்டோ, ரொனால்டினோ, ஓவன் போன்ற பல வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருந்தனர். அதுபோல், இப்போது மெஸ்ஸி மற்றும் போர்த்துகீசிய வீரர் கிறிஸ்டியானோ திகழ்கின்றனர். இருவரின் ஆட்டமும் வேறுபட்டது. அதில் மெஸ்ஸியின் ஆட்டம் சிறந்ததாக உள்ளது.

இப்போது மேட்ரிட் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ அதிக கோல்களை அடிக்க கற்று வருகிறார்’ என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.