வாக்களிப்பில் கலந்துகொண்டு பிறப்புரிமையை முழுமையாக பயன்படுத்துங்கள் – மனோ கணேசன்

Written by vinni   // September 21, 2013   //

manoமாகாண சபைத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் தமக்குரிய வல்லவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் அனைவரிடத்திலும் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி இன்றைய தினம் நடைபெறவுள்ள 3 மாகாண சபைகளுக்குமான தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள ஒவ்வொரு தமிழர்களும் அவர்களுக்குரிய தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வாக்குச்சீட்டு எங்கள் ஜனநாயக ஆயுதம். வாக்குரிமை எங்கள் பிறப்புரிமை. வாக்குரிமையுள்ள அனைவரும் வாக்களிப்பில் கலந்துகொண்டு எங்கள் இந்த பிறப்புரிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அற்ப சொற்ப சலுகைகளுக்காக எமது இந்த பிறப்புரிமையை அடகு வைக்காமல், நாளை வரும் நல்ல காலத்தை எதிர்நோக்கி ஆளுமையுள்ள வல்லவர்களை தெரிவு செய்ய வேண்டும். எனினும் இந்த நாட்டில் ஒரு இனமாக வாழும் எங்களின் இருப்பு இன்று பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது.

எம்மை எதிர்நோக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள எம்மவர்களை அதிலும் ஆளுமையுள்ள வல்லவர்களை நாம் தெரிவு செய்ய வேண்டும். இதற்காக நம்வசம் இருக்கும் வாக்குரிமையை அதிகபட்சமாக பயன்படுத்த, வாக்குச் சாவடிக்கு சென்று அமைதியாக வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள் என மத்திய, வட மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் வாக்காளர்களை கோருகின்றேன் என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.