துப்பாக்கி வெடித்ததில் வாக்காளர் காயம்

Written by vinni   // September 21, 2013   //

voteவட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கனகராயன் குள்ம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்றே தவறுதலாக வெடித்துள்ளது. அங்கு வாக்களிப்பதற்கு வருகைதந்திருந்த 24 வயதான நா.தவராசா என்பவறே காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சன்னம் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பட்டே அவரது காலில் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


Similar posts

Comments are closed.